ஈழம் குறித்து பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? வைகோவை ஒருமையில் சாடிய முதல்வர்!

0

நாளுக்கு ஒரு பேச்சு, செயல் என இயங்கும் வைகோவுக்கு என்ன கொள்கை இருக்கிறது. தனிச்சின்னத்தில் போட்டியிட முடியாத நீயெல்லாம் தலைவரா? என மதிமுக பொதுச்செயலாளரை கடுமையாக சாடியுள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொண்டார் முதல்வர் பழனிசாமி. அப்போது, திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை மிக கடுமையாக சாடி பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை ராசியில்லாதவர் எனவும் விமர்சித்தார்.

மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து பேசிய முதல்வர், கடந்த காலங்களில் ஈழம் குறித்து பேசி வந்த வைகோ இன்றைக்கு ஈழ அழிவுக்கு காரணமான திமுக, காங்கிரஸுடன் ஐக்கியமாகிவிட்டார். ஈரோட்டில் தனி சின்னத்தில் போட்டியிடாத வைகோ கட்சியினர் தங்களது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்துவிடலாம் என வைகோ குறித்து ஒருமையில் தாக்கி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.