உலகின் அதிகூடிய வயதான பெண்மணி இவர் தான் ! இவரது ஆசை என்ன தெரியுமா ?

0

ஜப்பானை சேர்ந்த 116 வயதான பாட்டி, உலகிலேயே மிகவும் வயதானவர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

தென்மேற்கு ஜப்பானில், புகுகோக்காவில் நர்சிங் வீட்டில் வாழ்ந்து வரும், கேன் தனகா (116) உலகிலேயே மிகவும் வயதானவர் என அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை கின்னஸ் சாதனை மையம் சனிக்கிழமையன்று அங்கீகரித்துள்ளது.

1903 ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி எட்டு குழந்தைகளில் ஏழாவது பிறந்தார் கேன்.

1922 ஆம் ஆண்டில் ஹீடியோ டானகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். மற்றொரு குழந்தையை தத்தெடுத்து வளர்ந்தனர்.

தினமும் காலை 6 மணிக்கே எழும் பழக்கம் கொண்ட இவர், கணிதத்திலும் ஆர்வம் கொண்டவராம். அதேசமயம் காபி மற்றும் பானங்களும் விரும்பி குடிப்பவர்.

கின்னஸ் சான்றிதழ் உடன் வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டதுடன், ஒரே நாளில் 100 சாக்லெட் சாப்பிட ஆசை என்று கூறி அனைவரையும் வியக்க வைத்தார்.

இதற்கு முன்பாக உலகின் வயதான மூதாட்டியான ஜப்பானை சேர்ந்த சியோ மியாகோ 117 வது வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.