எப்-16 போர் விமானத்தால் அமொிக்காவிடம் சிக்கி கொண்ட பாகிஸ்தான்!

0

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமான படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் கோபத்தில் அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான் அமொிக்காவின் எப்-16 போர் விமானங்களை பயன்படுத்தி இந்திய ராணுவ நிலைகளை தாக்கும் எண்ணத்துடன் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய விமான படை போர் விமானங்கள் அவற்றை விரட்ட சென்றன.

இரு நாட்டு போர் விமானங்களும் நடுவானில் கடுமையாக சண்டையிட்டன. அப்போது இந்திய விமானங்களை தாக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் அம்ராம்  ஏவுகணைகளை பயன்படுத்தின. இறுதியில் இந்திய விமானங்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவை திரும்பி சென்றன. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பயன்படுத்திய அம்ராம் ஏவுகணைகளின் பாகங்கள் இந்திய எல்லைகளில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இதுதான் பாகிஸ்தானுக்கு பொிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. எப்-16 விமானங்களை உள்நாட்டு தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக மட்டுமே அமொிக்கா பாகிஸ்தானுக்கு கொடுத்தது. மற்றொரு நாட்டை தாக்க அந்த விமானத்தை பயன்படுத்தக் கூடாது என்பது முக்கிய கண்டிஷன். இந்த நிபந்தனையை மீறினால் அந்த விமானங்களை அமொிக்காவால் திரும்ப பெற முடியும்.

அம்ராம் ஏவுகணைகளை எப்-16 விமானங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது இந்தியா தன் வசம் உள்ள  அம்ராம் ஏவுகணை பாகம் குறித்த தகவலை அமொிக்காவிடம் கூறிவிட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிராக எப்-16 போர் விமானத்தை பயன்படுத்தியது தொடர்பாக பதில் அளிக்கும்படி பாகிஸ்தானுக்கு அமொிக்கா உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.