எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு அதிகரிக்கலாம்!

0

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கும் விலைச் சூத்திரக் குழு இன்று (11) கூடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரக் குழு கூடி புதிய விலைச் சூத்திரம் குறித்து தீர்மானத்தை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நேற்றைய தினம் விடுமுறை என்பதனால் இன்று அக்குழு கூடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் புதிய விலை மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.