ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்? வெளிவரும் நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள்!

0

விமானத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கனேடியர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எதியோப்பிய பயணிகள் விமானம் வீழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 18 கனேடியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்துவிட்ட நிலையில், உயிரிழந்த கனேடியர்களில் 6 பேர் பிரம்டனின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 14 வயதான ஆஷ்கா டிக்சிட், 13 வயதான அனுஷ்கா டிக்சிட், அவர்களது பெற்றோர்களான 37 வயது கோஷா வைத்யா, 45 வயதான பிரிட் டிக்சிட், அவர்களது பெற்றோரான 73 வயது பனகேஷ் வைத்யா, 67 வயதான ஹன்சினி வைத்யா ஆகியோர் என்று விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் குடும்பமாக கென்யாவுக்கு மார்ச் விடுமுறையின் போது சுற்றுலா பயணம் சென்றதாகவும், அதன் போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகவும், ரொரன்ரோவில் வைத்து அவர்களது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.