கபொத சாதாரண தர பரீட்சை ! 969 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

0

தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் பாவனை உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சார்த்திகளின் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த-2018 டிசம்பர் 03 ஆம் திகதி முதல் டிசம்பர்-12 ஆம் திகதி வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெற்றன. நாடு முழுவதிலுமுள்ள 4,661 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது.

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதர பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பாடத்தில் 64.11% மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.இந்நிலையில் 71.66% ஆனோர் க.பொ.த.உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.