கருணாஸ் உள்ளிட்ட மூவர் அணி உடைந்தது-ஆளுக்கு ஒருவரை ஆதரிக்க முடிவு?

0

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து கொங்கு வேளாளர் இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனித நேய ஜனநாயகக் கட்சியின் தமீமுன் அன்சாரி ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாகப்  பிரிந்த நிலையில், இந்த மூவரும் தனி அணியாக இயங்கி வந்தனர்.

இந் நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே அணிக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலையில், ஆளுக்கு ஒருவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, திமுக கூட்டணிக்கு தமீமுன் அன்சாரியும், டிடிவி தினகரன் அணிக்கு கருணாசும், பாஜக தவிர்த்து அதிமுக அணிக்கு தனியரசும் ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளனனர். இது தொடர்பாக தனியரசு கூறும்போது, தேர்தல் கால உறவு என்பது வேரு, மக்கள் பிரச்சினைகளுக்கு இணைந்து செயலாற்றுவது என்பது வேறு. தனிப்பட்ட முறையில் நாங்கள் நண்பர்கள்தான். தமிழக உரிமைகளுக்காக நாங்கள் இணைந்து போராடுவோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.