காதலனுடன் வாழ விரும்பிய மனைவி ! சேர்த்து வைத்த கணவன்! வினோத சம்பவம்

0

திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பினோத் தனசேனா (28). இவருக்கும் உமா (22) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 17ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 20ஆம் திகதி பினோத் வீட்டுக்கு மூன்று இளைஞர்கள் வந்தனர்.

அதில் ஒருவரான சுஷில்குமார் என்பவர், தானும் உமாவும் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறினார்.

இது குறித்து பினோத் தனது பெற்றோருக்கும், உமா பெற்றோருக்கும் தெரியப்படுத்தியமைத் தொடர்ந்து எல்லோரும் காவல் நிலையம் சென்றனர்.

அங்கு பொலிசார் முன்னிலையில் காதலன் சுஷில்குமாருடன் சேர்ந்து வாழவிரும்புவதாக உமா கூறினார்.

இதையடுத்து தங்களது திருமணத்துக்கு தான் செலவு செய்த பணத்தை உமா திருப்பி கொடுக்கவேண்டும் என அவரின் கணவர் பினோத் கூறினார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என உமா கூறிய நிலையில் அதை ஏற்று கொண்ட பினோத், மனைவியை அவர் காதலனுடன் சேர அனுமதி கொடுத்தார்.

இதன்பின்னர் உமா, தனது காதலனுடன் சென்றுவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.