காதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை ! நடந்தது என்ன ?

0

காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு கனிஷ்கா (1½) என்ற மகள் உள்ளார்.

அண்மையில் கனிஷ்காவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் காட்டியும் சரியாகாததால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.

பின்னர் நேற்று முன் தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.

இதற்காக சரவணனின் உறவினர்கள் அங்கு சென்று விட்டு நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பினார்கள்.

அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்த போது சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர். குழந்தை கனிஷ்காவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.