காஷ்மீரின் அவலம்: தாய் இறந்தது தெரியாமல் சிகிச்சை பெறும் குழந்தைகள் – கள ஆய்வு

0

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழல் இது. காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோட்டு பகுதி கடும் பதற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்திய ஆளுகையின் கீழுள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆளுகையின் கீழுள்ள காஷ்மீர் என இரு பகுதிகளுக்கும் செல்லும் அரிய அனுமதி பிபிசிக்கு கிடைத்தது.

செவ்வாய்க்கிழமை இந்தியா நடத்திய ஷெல் குண்டு தாக்குதலில் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள ஒரு கிராமம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

அங்கு கேட்கின்ற பயங்கர வெடிச்சத்தங்கள், இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை கோட்டு பகுதியில் இருப்பதை உணர்த்தும் என்கிறார்கள் பிபிசி செய்தியாளர்கள்.

இந்திய ஆளுகையின் கீழுள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆளுகையின் கீழுள்ள காஷ்மீர் பகுதிகளில் நேரடியாக பிபிசி சென்று நிலைமையை பதிவு செய்தது.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள 16 வயதான அக்சாவை பிபிசி சந்தித்தது. “வழக்கமாக நான் பீதியடைவதுண்டு. ஆனால், இனிமேல் அவ்வாறு பயப்படமாட்டேன்,” என்று கூறினார் அக்சா.

உனக்கு பயமில்லையா, ஏன்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “இப்போது நான் தைரியமாக இருக்கிறேன்” என்று பதில் கூறிய அவர் செயற்கைக் கால் பொருத்தப்பட்டதை இடது கால் பகுதியில் இருந்த துணியை விலக்கி செய்தியாளரிடம் காட்டினார்.

இந்தியா வீசிய ஷெல் குண்டு காரணமாக 16 வயதான அக்சா இடது காலை இழக்க வேண்டியதாயிற்று.

இந்திய ஆளுகையின் கீழுள்ள காஷ்மீரில் அதிக ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இரவு முழுவதும் மக்கள் தூங்காத நிலைமையை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ளன.

தங்கள் வீடும் எந்நேரத்தில் வேண்டுமானாலும் ஷெல் குண்டுகளால் தாக்கப்படலாம் என்று மக்கள் அஞ்சுவதே இதற்கு காரணமாகும்.

பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களின் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது முதல், இதுவரை காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இருப்பக்கங்களிலும் ஒரு மணிநேரம் கூட அமைதி இல்லை.

பாகிஸ்தானின் ஆளுகையில் இருக்கின்ற காஷ்மீரின் பகுதியிலும் ஷெல் குண்டு தாக்குதல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.ஷ

அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பிபிசி செய்தியாளர்களே நேரில் கண்டுள்ளனர்.

வீடு முழுவதும் குண்டு வீச்சால் சுவர் துளைக்கப்பட்டு அழிந்துள்ள கட்டத்தை பார்த்தாலே எளிதாக இனங்காண முடிகிறது.

ஒரு வீட்டை தாக்கிய குண்டின் ஒரு பகுதி, இங்கு சிக்கியிருப்பதையும் பிபிசி செய்தியாளர் கண்டுள்ளார்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் எல்லாம், இத்தகைய இடங்களில் வசிக்கும் இரு நாட்டு மக்கள்தான் முதலில் பெரும் பாதிப்பு அடைவதாக தெரிய வருகிறது.

காஷ்மீர் மோதல்: அரிய அனுமதி மூலம் நேரடியாக ஆராய்ந்த பிபிசி – பிரத்யேக காணொளி

ஒரு ஷெல் குண்டு இங்கு விழுந்தபோது, அதிக அளவு சேதங்களை உருவாக்கியது. நானும் காயமடைந்தேன் என்று பிபிசி பாகிஸ்தான் செய்தியாளர் செகுன்டர் கெர்மானி தெரிவித்திருக்கிறார்.

இந்திய நிர்வாக பகுதியில், தாக்குதலின்போது அவ்விடத்தில் இருந்து வேறு எங்காவது செல்வது என்பது மிகவும் ஆபத்தானதாகும்.

பிபிசி செய்தியாளர்கள் நேரடியாக இந்த பகுதியில் செய்தி சேகரித்தபோது ஒரு மணிநேரமாக வெடிகுண்டு சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததாக பிபிசி இந்தியா செய்தியாளர் யோகிதா லிமாயே தெரிவித்தார்.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு எல்லை கோட்டு பகுதியில் இருக்கின்ற இந்த மூன்று சகோதரர்களின் வீடு ஒன்றும் பாதிக்கப்பட்டது.

காஷ்மீர் நிலவரம்

இந்த தாக்குதலில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரினுடைய ஒரு சகோதரர், சகோதரி மற்றும் தாய் கொல்லப்பட்டுள்ளனர்.

தங்களின் சகோதரரும், சகோதரியும், தாயும் இந்த தாக்குதலில் இறந்து விட்டார்கள் என்றுகூட தெரியாமல் இந்த மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு தாய்தான் உலகம். அவரையே முழுவதுமாக நம்பியுள்ளனர். அவர்கள் அம்மாவோடு பேச வேண்டுமென பிபிசி செய்தியாளிடம் கூறியுள்ளனர்.

“தன்னால் என்ன செய்ய முடியும்?” என பிபிசி செய்தியாளர் கவலைப்படுகிறார். அவருக்கு வந்த ஒரே யோசனை இதுதான். “அவர் இன்னொரு வார்டில் இருக்கிறார். எனவே, நீங்கள் உடனடியாக அவரை பார்க்க முடியாது,” என்று கூறினார்கள்.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலுள்ள தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளன. சிலர் அங்கேயே தைரியமாக தங்கியிருக்க விரும்பலாம் அல்லது சிலர் திரும்பிவர நினைக்கலாம் . ஆனால், 72 மணிநேர மோதலின் தீவிரம் குறையும் அறிகுறி இன்னும் அங்கு தென்படவில்லை.

பிற செய்திகள்:

Leave A Reply

Your email address will not be published.