கிழக்கில் எதிர்வரும் 19 மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு!

0

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 19ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தியும், சர்வதேசத்தை இலங்கையில் தலையிட வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இப்பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் (வந்தாறுமூலை, தென் கிழக்கு, திருகோணமலை வளாகம், யாழ் மற்றும் வவுனியா வளாகம்), விபுலானந்தா இசை நடனக்கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி, பாடசாலை மாணவர்கள், தமிழாசிரியர் சங்கத்தினர்,அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள், ஊடக சங்கங்கள், சமய தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், சகல கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மகளீர் அல்லது மாதர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.