கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்! அறிவிப்பு விரைவில்!

0

எதிர்வரும் 8ம் திகதி கண்டியில் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற நீண்ட இழுபறி அரசியலரங்கில் மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவிற்கும், ராஜபக்ச குடும்பங்களிற்குள்ளும் நீடித்து வந்தது.

இந்த குழப்பங்களிற்கெல்லாம் ராஜபக்ச குடும்பம் தற்போது தீர்வு கண்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில், கோத்தபாய ராஜபக்சவையே களமிறக்குவதென்ற தவிர்க்க முடியாத முடிவிற்கு மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் வந்துள்ளனர்.

குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் நிலவிய குழப்பங்கள் முடிவிற்கு வந்ததையடுத்து, வரும் 8ம் திகதி கோத்தபாயவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது என சில வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதால், 20வது திருத்தத்திற்கும் அவர் ஆதரவளிக்கமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.