சபாநாயகருக்கு விசேட கௌரவ விருது!

0

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று விசேட கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். தொடர்பான நிகழ்வு கண்டியில் உள்ள மல்வத்த மகா விகாரையில் நடைபெறவுள்ளது.

மல்வத்து மகாபீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்கநாயக்கர்களினால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு இந்த விசேட கௌரவ விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இலங்கை ராமான்ய நிக்காய ‘விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன’ என்ற விருதை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தது.

இதேவேளை ஜப்பான் அரசாங்கம் ஜப்பானின் உயர் விருதான ‘உதயசூரியன்’ விருதை கடந்த வருடம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ‘விஷ்வ சாம’ விருதை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியிருந்தது.

அத்துடன் இந்தியாவின் அப்துல் கலாம் விஞ்ஞான நிறுவனம் ‘ஆசியாவின் பெருமை’ என்ற விருதையும் சபாநாயகருக்கு அண்மையில் வழங்கியிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர்களை எடுத்து நோக்கினால் அதிக கௌரவங்களையும் விருதுகளையும் பெற்ற ஒருவராக இன்றைய சபாநாயகர் விளங்குகிறார்.

Leave A Reply

Your email address will not be published.