சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

0

எதிர்வரும் திங்கட்கிழமை(4) உலகளாவிய இந்துக்களால் மகா சிவராத்திரி தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

இதனையொட்டி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு கௌர ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

Leave A Reply

Your email address will not be published.