சிவராத்திரியை முன்னிட்டு நாளை வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை!

0

இன்று சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மேலதிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறைக்கு பகரமாக வாரத்தின் வேறொரு விடுமுறை தினத்தில் பாடசாலைகளை நடத்த அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் விசேட தினமான சிவராத்திரி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.