சும்மா இருப்பது ஒரு வேலையாம் !அதற்கு சம்பளம் 1.5 லட்சம் ! எந்த நாட்டில் தெரியுமா ?

0

ஸ்வீடனின் உள்ள கோதன்பர்ங் ரயில் நிலையத்தில் சும்மா அமர வேண்டும் என்பதுதான் வேலை. ரயில் நிலையத்தில் நீங்கள் படம் பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம், தூங்கலாம் மற்றபடி நீங்கள் பணிக்கு வந்ததை உறுதி செய்தால் போதும். ஸ்வீடனில் வெளியாகியுள்ள வேலை குறித்த அறிவிப்பு ஒன்று உலகம் முழுக்க பரவி வருகிறது.

காலை முதல் மாலை வரை இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. காலையில் வருகையை பதிவு செய்துவிட்டு சென்றுவிடாலம் ஆனால் மீண்டும் மாலையில் செல்வதை பதிவு செய்வது கட்டாயம். ரயில் நிலையத்தில் நீங்கள் படம் பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம், தூங்கலாம் மற்றபடி நீங்கள் பணிக்கு வந்ததை உறுதி செய்தால் போதும்.

இந்த பணி, நிரந்தர அரசுப்பணியாம். பிடிக்கவில்லை என்றால் வேலையை ராஜினாமாவும் செய்யலாம். இதற்கு நம்ம ஊர் மதிப்பில் மாதம் 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் சம்பளமும் அளிக்கப்படுகிறது என்பதுதான் வியப்பின் உச்சக்கட்டம். சம்பளம் மட்டுமல்லாது வருடாந்திர ஊதிய உயர்வு, விடுமுறை மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் வழங்கப்படுகிறது

இந்த வேலைக்கு ஸ்வீடன் நாட்டினர் மட்டுமல்ல உலகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். பணியில் இருப்பவர் ராஜினாமா செய்தால் அந்த வேலை அடுத்த ஒருவருக்கு வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.