சுவிஸ் வெளிவிவகார ஆலோசகர் வடக்கு ஆளுனரை சந்தித்து கலந்துரையாடல்!

0

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

வடமாகாணத்தில் நிலவும் காணி , நீர் , வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது மேலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.