சூர்யா-38ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷே கூறிய தகவல்

0

சூர்யாவின் நடிப்பில் NGK படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் படம் கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று தெரிகிறது.

மேலும் இந்த படத்திற்கு இடையில் இயக்குனர் கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்திலும் நடித்து முடித்துள்ளார், சூர்யா. இந்த இரு படங்களும் முடிந்துவிட்டதால் இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்ராவின் இயக்கத்தில் சூர்யா-38ல் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி இந்த படத்தில் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், இந்த படத்திற்கான அனைத்து பாடல்களும் முடிவடைந்துவிட்டன. சுதா கோங்ராவுக்கும் எனக்குமான நட்பு நீண்ட வருடங்களையுடையது. ரொம்ப ரொம்ப அருமையான இணைவு இந்த படத்தில் நடந்துள்ளது. இதுவரை இந்த மாதிரியான இணைவு எனக்கு அமைத்தது இல்லை. அதனால் தான் இப்பட பாடல்களுக்குரிய தகவல்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்துள்ளோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.