ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிக்கின்றது ! மஹிந்த குற்றச்சாட்டு

0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அவிசாவளை – தல்துவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமது ஆட்சி காலத்தில் வரிகள் அறவிடப்பட்டதாக தெரிவித்து, அதனை விட 2 மடங்குகள் அதிகமான வரிகளை தற்போதைய அரசாங்கம் அறவிடுகின்றது.

நெடுஞ்சாலைகள் அமைப்பு விடயத்தில், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் புறக்கணிப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரை அராசங்கம் ஆட்சி செய்த நாட்களில் பழிவாங்களுக்கு செலவழித்த காலமே அதிகம்” எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.