ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த – மைத்திரி தரப்புகள் முக்கிய பேச்சுவார்த்தை!

0

சிறிலங்கா சுதந்திர கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இன்று மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.

SLPPயின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே என்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்த விடயம் இன்றைய பேச்சுவார்த்தையில் பிரதிபலிக்கலாம்.

கோட்டாவின் நியமனம் குறித்து மைத்திரி தரப்பு அதிருப்தியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று நாராயன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கோட்டா, நாட்டைக் ‘கட்டியெழுப்பும் திறமை தம்மிடமே இருப்பதாக’ கூறி இருக்கிறார்.

இந்தநிகழ்வில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் கலந்துக் கொண்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.