தமிழ்நாட்டில் 7ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பம் ! தாயின் 2வது கணவனின் கொடூரச் செயல்

0

பழனியில் 12 வயது சிறுமியை தாயின் 2வது இரண்டாவது கணவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த நிலையில், அவர் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழனி சார் ஆட்சியர் அருண்ராஜுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பிலிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரை பெற்ற சார் ஆட்சியர் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்திரவு பிறப்பித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தாய் மாரியம்மாளின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் இந்த இரக்கமற்ற செயலுக்கு காரணம் என்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக அவன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், அந்தக் கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.