தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கவில்லை! டக்கிளஸ் குற்றச்சாட்டு!

0

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.

இதில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,

நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும் தீர்வாக உரிய முறையில் உண்மைகைள் கண்டுபிடிக்கப்பட்டு நிரந்தர தீர்வுககளை பெற்று கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களிடையே நம்பிக்கை ஊட்டும் வகையிலான புறச் சூழ்நிலையை உருவாக்க தவறிவிட்டனர். அதுமட்டுமன்றி இதை முன்னெடுப்பதில் கூட இவ்விரு தரப்பினரும் அக்கறையும் கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் போராடுகின்றனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதில் அரசோ அன்றி தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை தம்வசம் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அவர்களது வலிகளை போக்குவதற்கான வழிவகைகளை கண்டுபிடித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும் என டக்கிளஸ் தனது கருத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.