திமுகவில் அழகான வேட்பாளர்- கருணாநிதி ஸ்டைலில் உதயநிதி! வெட்கப்பட்ட தமிழச்சி!!

0

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேச்சு.

திமுகவில் ஓர் அழகான வேட்பாளர்... கருணாநிதி ஸ்டைலில் மேடையில் பேசிய உதயநிதி!

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அழகான வேட்பாளர்! உதயநிதி க்கான பட முடிவு

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் “ என கேட்டுக்கொண்டார்.

மேலும்,  ”திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் ஓர் அழகான வேட்பாளர். அவரை உங்கள் தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உங்களது ஆதரவை அளிக்க வேண்டும். தான் அழகு என்று குறிப்பிட்டது அவர் தமிழின் மீது கொண்ட பற்றையும், கழகத்தின் மீது கொண்ட அன்பையும் தான் “ என தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக பேசிய தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், ‘‘அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் எனவும், ஆதலால் அவரின் ஆதரவு பெற்ற தனக்கு தொகுதி வாக்காளர்கள்; வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.