தேர்தல் வேட்பாளர்களுக்கு கொக்கேன் இரத்தப் பரிசோதனை அவசியம் – நாமல் தெரிவிப்பு!

0

நாட்டில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பாளர்களாக வரும் சகலரினதும் உடம்பில் கொக்கேன் போதைப் பொருள் காணப்படுகின்றதா? இல்லையா? எனக் கண்டறிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இரத்தப் பரிசோதனையொன்றை நடாத்தினால் சிறந்தது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. கூறியுள்ள போதிலும் இதுவரையில் எவருடைய பெயரும் வெளிவரவில்லை. அவ்வாறானவர்கள் இருப்பதாக வாய் அளப்பதை மாத்திரமே அவர் செய்து கொண்டிருக்கின்றார்.

அப்படியானவர்கள் இருந்தால், ஊடகங்களின் முன்னாள் வந்து பெயர்களை அறிவிக்குமாறு நான் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். இந்த கொக்கேன் தொடர்பில் சகல எம்.பிக்களினதும் இரத்தப் பரிசோதனை நடாத்த வேண்டும் எனவும் நாமல் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.