நயன்தாரா பற்றி பேசி மூக்குடைபட்ட ராதாரவி! கட்சியிலிருந்தும் நீக்கம்! மன்னிப்பும் கோரினார்!!

0

இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்க தயார். மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இருந்தால் இணையவும் தயார்” என்றார்.

நயன்தாராவைப் பற்றி தவறாக பேசவில்லை. என்னுடைய பேச்சு அரசியலாக்கப்பட்டுள்ளது என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். 

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக, சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்நிலையில், தனது பேச்சு குறித்து ராதாரவி அளித்த பிரத்யேக பேட்டியில், ”திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணம் எனக்கு தெரியாது. வாகை சந்திரசேகர் சொன்னதற்கு பிறகுதான் எனக்கே தெரியும்.

நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசவில்லை. நான் பேசியது அரசியலாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் திமுகவிற்கு கெட்ட பெயர் வர வேண்டாம் என்று நானே விலகுவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ட்விட்டரில் ட்வீட் போடுபவர்கள் எல்லாம் நான் முன்பு பேசியதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது விமர்சித்துக்கொண்டு இருக்கின்றனர்.

எம்ஜிஆர் ரஜினி யோடு நயன்தாராவை கம்பேர் பண்ணாதீர்கள் என்று சொன்னேன். அதை ஒத்துக் கொள்கிறேன்.

மீடு சர்ச்சை கூட வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

நான் அப்போது சினிமாவில் உள்ள நியாயத்தை தான் பேசினேன்.

இந்த நேரத்தில் அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் அது தவறு.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்க தயார். மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இருந்தால் இணையவும் தயார்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.