நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலில் 49பேர் பலி!

0

நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், அத்துடன் 9 இந்தியர்களும் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் பலர் குடியேறிகளும், குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்களில் ஒன்றான பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து Christchurch பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அந்நாட்டு நேரப்படி இன்று மத்தியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 28 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் இருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன்படி, தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது

அத்துடன், இந்தியாவைச் சேர்ந்த பலரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இத்தாக்குதலில் இந்தியர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.