நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.க….! கி.வீரமணி பிரசாரம்

0

தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்றால் அது பா.ஜ.க. என்று கி.வீரமணி கூறினார்.

தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில், பிரதமர் மோடி அலை ஓய்ந்துவிட்டது.  அவரால் ஆட்சிக்கு வரமுடியாது.

தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துவிட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். திராவிடர் கழகம் இந்தியாவை பற்றி கவலைப்படும் கழகம்.

பா.ஜ.க. நோட்டாவுடன்தான் போட்டி போடுகிறது. பா.ஜ.க. வெற்றி பெற்ற பின் ரூ. 15 லட்சம் தருவதாக கூறினார்கள். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் வேலைகிடைக்கவில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.