பகிடிவதை கொடுமையால் பறிபோன 2 தமிழ் மாணவர்களின் உயிர்; மற்றொரு மாணவன் ஆபத்தான நிலையில்!

0

கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதையடுத்து. இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மதுரையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பகிடிவதை கொடுமையால் தற்கொலை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

மதுரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது19). இவர் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் செல்லூர் பரத், அருள்தாஸ் புரம் பாக்கியநாதன். இவர்களும் முத்துப்பாண்டியுடன் படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் கடந்த 2-ந்தேதி வி‌ஷம் குடித்து மயங்கினர். அவர்களை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரத் பரிதாபமாக இறந்தார். முத்துப்பாண்டி இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். பாக்கியநாதன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்து முத்துப்பாண்டியின் தாயார் சித்ரா தேவி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் தொந்தரவால்தான் முத்துப்பாண்டி மற்றும் பரத் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில் தியாகராஜா கல்லூரியில் படித்து வரும் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசக்தி மற்றும் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்து இருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.