பதுக்கிவைக்கப்பட்டிருந்த 700 கிலோ குட்கா பறிமுதல்… திருப்பூரில் 3 வட மாநில இளைஞர்கள் கைது!

0

திருப்பூரில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 2 குடோன்களில் சுமார் 700 கிலோ அளவுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குட்கா வழக்கில் கைது]’

திருப்பூர் மாநகரப் பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சட்டவிரோதமாக குட்கா போதைப்பொருள் விற்கப்படுவது அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், இன்றைய தினம் காவல் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, திருப்பூர் குமரன் காலனி பகுதியில் உள்ள ஒரு குடோனில், திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி காவல் துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ குட்கா பண்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், அங்கே இருந்த சுரேஷ் மற்றும் பப்பு ஆகிய 2 வடமாநில இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கைது

அதைத் தொடர்ந்து, அதே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றொரு பகுதியில் உள்ள குடோனிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில், சுமார் 450 கிலோ வரையில் இருந்த  குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு, பிஸ்கட் பெட்டிகளில் குட்காவை மறைத்துவைத்து விற்பனைசெய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த குடோனின் உரிமையாளர் ஓம் பிரகாஷ் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இரு வேறு இடங்களில் சேர்த்து சுமார் 700 கிலோ அளவுக்கு குட்காவைப் பறிமுதல்செய்துள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணையை நடத்திவருகிறார்கள், திருப்பூர் காவல் துறையினர்.

Leave A Reply

Your email address will not be published.