பரபரப்பான மன்னார் புதைகுழி காபன் அறிக்கை வெளியானது!

0

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க கார்பன் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

Leave A Reply

Your email address will not be published.