பலமான கட்டமைப்புடன் கொழும்பில் இயங்கிய புலிகளை அழிக்க உதவியர்கள் இவர்கள்தான்!!

0

விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினர் கொழும்பில் பல­மிக்க கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருந்­தனர். அவர்களை அழிக்க புல­னாய்­வுத்­து­றையில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் இணைந்து நாட்­டுக்­காகப் பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ தெரி­வித்தார்.

கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர எல­மல்­தெ­னி­யவில் “எலிய” அமைப்­பினால் தொழி­ல­திபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் நடாத்­தப்­பட்ட கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு அவர் உரை­யாற்­றினார்

கண்டி மாவட்­டத்தின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, அநு­ராத ஜய­ரட்ன, ஆனந்த அளுத்­க­மகே, திலும் அமு­னு­கம மற்றும் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் உட்­படப் பலரும் கலந்து கொண்­டனர்.

இதில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் பாது­காப்பு செய­லாளர்,

நாட்டில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு எட்­டப்­ப­டா­மைக்குக் காரணம் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை அர­சி­யல்­வா­திகள் தமது வாக்­கு­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­மை­யாகும்.

சிங்­கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொது­வான பிரச்­சி­னை­க­ளுக்­குட்­பட்­டுள்­ளனர். இது பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், வறுமை, வீடு, தொழில் முத­லா­னவை சார்ந்த பிரச்­சி­னை­க­ளாகும். இவை தீர்க்­கப்­பட வேண்டும்.

இப்­பி­ரச்­சி­னைகள் சகல சமூ­கங்­க­ளுக்கும் பொது­வான பிரச்­சி­னை­க­ளாகும். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு காரணம் சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் தான் என்று தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தான் காரணம் என்று சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும், சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் என்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது மக்­க­ளிடம் கூறி­வ­ரு­கின்­றனர். இந்த அர­சியல் போக்கு சிறு­பான்மை தமிழ், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நாட்டு மக்­களின் பிரச்­சி­னைகள் எது­வித அர­சியல் பேத­மு­ம­மின்றி தீர்க்­கப்­பட வேண்டும். இதில் தீர்வு காணப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­களுள் வறுமை ஒழிப்பு மிக முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாகும். இதற்­காக சரி­யான பொரு­ளா­தாரக் கொள்­கையின் கீழ் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும்­போது சகல இனத்­த­வர்­களும் கெள­ர­வ­மாக வாழும் நிலை உரு­வாகும்.

இந்­நாட்டில் எதிர்­கா­லத்தில் சகல இனத்­த­வர்­களும் அச்சம், பீதி­யின்றி கௌர­வ­மாக வாழும் சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த வேண்டும். மக்­களின் மத சுதந்­திரம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்­லா­ம­லாக்­குவோம்.

மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், முப்­பது வருட கொடிய பயங்­க­ர­வாத யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இப்­ப­யங்­க­ர­வா­தத்தால் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் பயங்­க­ர­வாத யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தமை மக்கள் ஆணைக்கு மாற்­ற­மான செய­லல்ல.

மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­த­மையால் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் எதி­ரி­க­ளாலும் நாம் இன­வா­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டோம். நாம் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக காட்­டப்­பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவ­ருக்கும் நன்­மை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

கொழும்பில் சேரி­களில் மக்கள் எது­வித வச­தி­க­ளற்ற நிலையில் சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்­கின்­றனர். இந்­நி­லையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடி­வீட்டுத் திட்­டங்­களை உரு­வாக்கி சேரிப்­புற மக்­களை குடி­ய­மர்த்­தினோம். மக்கள், தோட்­டங்­களில் அல்­லது சேரி­களில் வாழ்ந்த விகி­தா­சாரத்­திற்­கேற்ப மாடி­வீட்டுத் திட்­டங்­களில் குடி­யேற்­றப்­பட்­டனர்.

இவ்­வி­கி­தா­சாரத்தில் எது­வித மாற்­றங்­க­ளையும் செய்­ய­வில்லை. இக்­கு­டி­யேற்­றத்தில் இன, மத பேதங்கள் பார்க்­கப்­ப­ட­வில்லை. ஆனால், சில அர­சி­யல்­வா­திகள் சிங்­கள மக்­களை குடி­யேற்றி விட்டு தமிழ், முஸ்லிம் மக்­களை கொழும்­பி­லி­ருந்து வெளி­யேற்ற முற்­ப­டு­வ­தாக பிர­சாரம் செய்­தனர். இதனை மக்­களில் ஒரு சாரார் நம்­பினர். இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் எனக்­கெ­தி­ரான நிலைப்­பா­டுகள் ஏற்­பட்­டன. ஆனால், இதன் உண்­மைத்­தன்­மையை இன்று மக்கள் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நாம் எதிர்­கா­லத்தில் நீதி நியா­யத்தை உறு­திப்­ப­டுத்­துவோம். சிங்­கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌர­வ­மாக வாழ்­வதை விரும்­பு­கின்­றனர். இதனை உறு­திப்­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து சமா­தா­னத்தை நிலை நாட்­டி­ய­மையால் முஸ்லிம் சமூகம் சுதந்­தி­ர­மாக வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் நிலை உரு­வா­கி­யது. எம்­மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்­நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்­தன. நாம் அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­ப­ட­வில்லை.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினர் கொழும்பில் பல­மிக்க கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருந்­தனர். இதனால் கொழும்பில் பொரு­ளா­தார மையங்­களில் குண்­டுகள் வெடித்­தன. அப்­பாவிப் பொது­மக்கள் உயி­ரி­ழந்­தனர். அர­சியல் தலை­வர்கள் கொல்­லப்­பட்­டனர். விடு­தலைப் புலி­களின் கட்­ட­மைப்பை அழித்­தொ­ழிப்­பதில் புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் பெரும் பங்­க­ளிப்பு செய்­தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாது­காப்­புக்கு பங்­க­ளிப்பு செய்­துள்­ளது. பாது­காப்­புத்­து­றையில் புல­னாய்வுப் பிரிவில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­தனர். இப்­பு­ல­னாய்வுத்துறை அதி­கா­ரிகள் நாட்­டுக்­காகப் பணி­யாற்­றினர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.