பாரிய மோசடிகளை விசாரிக்க விஜேதாஸ ராஜபக்‌ஷ விசேட நடவடிக்கை!

0

மஹாபொல பொறுப்பு நிதியம், சீருடை வவுச்சர் வழங்கும் திட்டம் , சுரக்‌ஷா காப்புறுதித் திட்டம் என்பவற்றில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவை தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட இருப்பதாகவும் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நீதிமற்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.