பிரசவத்தின் போது நடந்த கொடூரம்; தலை வேறு உடல் வேறாக பிரிந்த குழந்தை!

0

பிரசவத்தின் போது உடல் தனியாகவும் தலை தனியாகவும் பிரிந்து வந்த சம்பவம் ஒன்று இந்தியா காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தாயின் உடல் நிலை படு மோசமாக உள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த பொம்மி என்பவருக்கே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருமணமாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இவர் கர்ப்பமாகியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

காலை 6 மணி அளவில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர், பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளார். போதிய பயிற்சி இல்லாத செவிலியர் என்பதால் குழந்தைப் பிறப்பின்போது குழந்தையின் தலையில் இடுக்கி வைத்து எடுத்துள்ளார்.

குழந்தை வெளியே வரவில்லை என்பதால் அதிக அழுத்தம் கொடுத்து தலையை எடுத்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் தனியாக வெளியே வந்தது. ஆபத்தை உணர்ந்த அந்த செவிலியர், 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் பொம்மியைக் கொண்டு சென்றார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் வயிற்றில் இருந்த குழந்தையின் உடலை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார்கள்.

தற்போது ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மி சிகிச்சை பெற்று வருகிறார். கூவத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவம் பார்த்த செவிலியர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என உறவினர்கள் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.