பிரபல ரவுடி பேபி நடிகைக்கு விரைவில் திருமணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா ??

0

பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய், நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜய்யை வைத்து ‘தலைவா’, அஜித்தை வைத்து ‘கிரீடம்’, விக்ரமை வைத்து ‘தெய்வத்திருமகள்’ ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’,என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

அதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார். ஏ.எல். விஜய்க்கும் அமலாபாலுக்கும், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தமுறையும் அவர் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை சாய் பல்லவியை திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் இயக்கத்தில் வெளியான ‘கரு’ படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த போது, இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டு, பின் காதலாக மாறி தற்போது அது திருமணம் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது வதந்தியாக இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.