பிள்ளையின் மேலதிக வகுப்புக்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபா செலவு செய்யும் எம்.பி!

0

தனது பிள்ளையின் மாதாந்த மேலதிக வகுப்புக்களுக்கு மாத்திரம் 65 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இக்காலத்தில் பிள்ளைகளுக்கு காலையில் பாடசாலை செல்வதற்கும், மாலையில் மேலதிக வகுப்புக்களுக்கும் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது கடந்த 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முறைமையினால் ஏற்பட்ட விளைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.

டியுசன் பிரச்சினைக்கு தீர்வொன்று அவசியமாகும் எனவும், முடியுமானால் டியுசன் ஆசிரியர்களை கல்வி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளுமாறும் தயாசிறி எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.