புகலிடம் கோரி வெளிநாடு சென்ற இலங்கை இராணுவத்தினர்! வெளிவந்த உண்மை

0

சில தினங்களுக்கு முன்பு தென் இலங்கையிலிருந்து நியூசிலாந்து நோக்கி செல்ல முயன்ற படகு பிடிபட்டதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நியூசிலாந்து செல்ல முயன்றவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 3 பேரும் விமானப்படையில் முன்பு அங்கம் வகித்த 2 பேரும் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் கல்லி, புத்தளம், கண்டி, இரத்னபுரி, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வகையில் இவர்கள் தஞ்சக்கோரிக்கையாளர்களாக பார்க்கப்பட்டாலும் சட்டரீதியாக இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேபோல், கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்ற 70 பேர் கொண்ட படகு, அத்தீவுக்கு சென்றடைந்த பின் அதிலிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

சமீப ஆண்டுகளாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.