புதிய வீதி ஒழுங்குச் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது!

0

அதிக வேகம், மது போதையில் வாகனம் செலுத்தல், ரயில் சமிக்ஞையை மீறி வாகனம் செலுத்தல் உட்பட 7 குற்றச் செயல்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தை செலுத்தும் சட்டத்தை கொண்டுவருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கான தண்டனையாக இந்த சட்டம் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட போதிலும், 3 ஆயிரம் ரூபா தண்டப்பணமாகவே அது சட்டமாகியது.

நாட்டில் அன்றாடம் இடம்பெற்றுவரும் விபத்துக்களில் சுமார் 8 பேர் ஒரு நாளில் உயிரிழக்கின்றனர்.

இவற்றைக் கட்டுப்படுத்த இந்த புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.