பெண்ணிடம் சில்மிஷம்? கோவை திமுக பிரமுகர் கைது!

0

கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் சந்திரன். இவர் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சி தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும்,  திமுகவின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

கடந்த 8 ம் தேதி சென்னையில் கட்சியின் வேட்பாளர் நேர்காணலுக்கு சென்று விட்டு ரயிலில் கோவை திரும்பி உள்ளார் .அப்போது உடன் பயணம் செய்த பெண், தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூச்சலிட, அருகில் இருந்த ஒரு நபர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். 

ரயில்வே போலீசார் உடனடியாக அந்து விசாரணை செய்ததில், தவறுதலாக பெண் மீது தனது கால் பட்டதாகவும், அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சமாதானம் செய்து விட்டு ஊர் திரும்பினார்.

இந் நிலையில்,  சென்னையில் இருந்து வந்த ரயில்வே போலீசார், அவர் மீது சென்னையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சந்திரனை கைது செயதனர். இதனால் கோவை பகுதி திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.