மகிந்தவின் நெருங்கிய சகா மீது பட்டப்பகலில் துப்பாக்கிப் பிரயோகம் !

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெலிஅத்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமரகோ மனம்பேரிகே கபில பிரியதர்ஷன என்ற உறுப்பினரே இன்று காலை 6.15 – 7.30 மணியளவில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அவர் மீது 4 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது அறையின் அறைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.