மன்னார் கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு ! தொடரும் போதை பொருள் கடத்தல்

0

மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

33 பொதிகளில் பொதியிடப்பட்டு, கடலில் மிதந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம், சுமார் 8000 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.