மிக பெரிய போர்வெடிக்கும் ! தமிழீழம் மலரும் ! காசியானந்தன் தெரிவிப்பு

0

தமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஈழத்தின் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். அதே வேளை அங்கு நடராஜனின் உறவினரும் அமமுகவின் துணை பொதுச்செயலாளருமான TTV தினகரனும் சென்றிருந்தார்,

அங்கு காசி ஆனந்தன் நினைவுரை ஆற்றும்போது மரியாதைக்குரிய தம்பி தினகரன் அவர்களே உங்கள் சித்தப்பா தமிழ் ஈழத்திற்கும் தமிழ்ஈழ விடுதலை புலிகளுக்குக்கும் ஈழ தமிழர்களுக்கு எண்ணில் அடங்க உதவிகளை செய்தார் உங்க சித்தப்பா நேரடி தொடர்பு கொண்டிருந்தார். நிச்சயம் தமிழ்ஈழம் மலரும் , மிக பெரிய போர்வெடிக்கும், மீண்டும் விடுதலை புலிகள் புதிய வேகத்துடன் போர் புரிவார்கள். உங்கள் சித்தப்பா கனவு நினைவாகும்.

உங்கள் தலைமை இயங்கும் அரசு ஆதரவு தரவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அப்போது தினகரன் சிரித்த முகத்துடன் தலையை அசைத்தார் அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. பக்கத்தில் இருந்த பழ நெடுமாறன் தினகரன் கையை இறுகப் பற்றிக்கொண்டார், இந்த நிகழ்வு தமிழ் உணர்வாள் நெஞ்சில் பூரிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இருக்கும் பெரும் பலமான கட்சிகளில் அமமுகவும் ஒன்று, நிச்சயம் அவர்களால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் அது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கையாகும்.

Leave A Reply

Your email address will not be published.