மைத்திரியின் அதிரடி அறிவிப்பு; மீண்டும் பரபரப்பாகுமா தென்னிலங்கை?

0

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடாத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுத்தேர்தலும் சிலவேளைகளில் அதற்கு முன்னர் நடைபெறக்கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது என்றும் சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரணதண்டனை வழங்கும் திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றும் எந்தவொரு தடை வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்த அவர், ஜனாதிபதி கொலைச்சதி விவகார விசாரணை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் சி ஐ டி அடுத்த வாரம் இறுதி அறிக்கையை சட்ட மா அதிபரிடம் கையளிக்கும் என்றும் கூறினார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டங்களை யாரவது முன்வைத்தால் தான் வரவேற்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக பிரதானிகள் முன்னிலையில் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.