மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விரைவில் மருத்துவ பீடம்!

0

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல பல்கலைக்கழகங்களில் தற்பொழுது மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால், 300 மருத்துவ பீட மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.