“ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாமாம்!”

0

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “ஒட்டுமொத்த நாடே ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையிடம் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என அறிந்துகொள்வதற்கு ஆவலாக இருக்கிறது.

இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் அதிக சாதனைகளை செய்திருக்க முடியும். முந்தைய அரசின் சுயநலத்தால் நாடு பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசியல் ரஃபேல் போர் விமானம் பக்கம் திரும்பியிருக்கிறது.

மோதியை எதிர்க்கிறீர்களா? செய்யுங்கள், ஆனால் தேசநலன்களை எதிர்க்காதீர்கள். அவர்களது மோதிக்கு எதிரான தொல்லைகள் மசூத் அஸ்கர், ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளுக்கு உதவாத வகையில் கவனமாக நடந்துகொள்ளுங்கள்,” என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.