ரத்கம கொலை சம்பவம் தொடர்பில் இரு பொலிஸாருக்கு விளக்க மறியல்!

0

ரத்கம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (05) கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் தென் மாகாண விசேட புலனாய்வு பிரிவின் முன்னாள் பரிசோதகர் எனவும் மற்றவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.