ரவிராஜ் கொலைக்கு கோத்தபாயாவால் கருணாவுக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பில் அம்பலம்!

0

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது புலனாய்வு பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராச்சிகே அபயரத்ன கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் வழங்கினார்.

விராஜை கொலை செய்கிவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 5 கோடி அரச நிதியை கருணா குழுவிற்கு வழங்கினார் என லியனாராச்சிகே அபயரத்ன நீதிமன்றில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- ரவிராஜ் கொலை அரசியல் சூழ்ச்சியால் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வசந்தன் என்பவர் ஊடாக கருணா தரப்பிற்கு வழங்கப்பட்டது. இந்த கொலை பிரதிப் பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு பிரிவின் அத்தியட்சகர் டூல் ஆகியோருக்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டன என்றார்.

மேலும் வழக்கின் விசாரணைகள் மார்ச் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. ரவிராஜ் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த சாட்சியான நான்காக சாட்சி எதிர்வரும் 2ஆம் திகதி சாட்சியம் வழங்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.