ராகுலை தோற்கடிப்போம்! கம்யூனிஸ்ட் கட்சிகள் சபதம்!

0

தமிழகத்தில் திமுக கூட்டணியில்,  காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் ஒரே அணியில் இருந்தாலும், கேரளாவில் காங்கிரசுக்கு நேர் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.

இந்நிலையில் கேரளாவின் வயலார்  தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று உறுதியாகக் கூறினார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாரம் யெச்சூரியும் ராகுலை தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.  

கேரளாவில் ராகுல் போட்டியிடுவதால், காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், இது தமிழகத்தில் திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.