ராஜஸ்தான் குழந்தைக்கு அபிநந்தன் பெயர்

0

கடந்த 27ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் தக்க பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பின. இதில் இந்தியாவின் போர் விமானம் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமான படை வீரர் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தினர் அவரை சிறை பிடித்தனர்.

எதிாியிடம் அகப்பட்ட போதும், அபிநந்தன் துணிச்சலாக பேசினார். குறிப்பாக எதற்காக வந்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் தைாியமாக அதை கூற முடியாது என்று கூறினார். இந்த வீடியோவை பார்த்த இந்திய மக்கள் அனைவரும் அபிநந்தனின் தைாியத்தை பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் நேற்று அபிநந்தனை விடுதலை செய்தது. இதனையடுத்து நேற்று இரவு இந்தியா வந்தார். இந்நிலையில் அபிநந்தனை பெருமை படுத்தும் வகையில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியனர் நேற்று பிறந்த தங்களது மகனுக்கு அபிநந்தன் என்று பெயாிட்டனர். 

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கிஷான்கர் பகுதியை சேர்ந்த ஐனேஷ் பூட்டானி நேற்று தனது   குடும்பத்தினருடன் செய்தியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மருமகள் சப்னா தேவிக்கு பிரசவ வலி எடுத்தது.  அதனை தொடர்ந்து  அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு அபிநந்தன் பெயர் இட்டனர். சப்னா தேவி இது குறித்து கூறுகையில், என் மகனை அபிநந்தன் என்று அழைக்கும் போதெல்லாம் விமான படை வீரர் அபிநந்தனின் வீரசெயல்களை நினைத்து கொண்டிருப்போம். என் மகனையும் மிகவும் தைாியமிக்க மனிதனாக வளர்ப்பேன்  என்று கூறினார். 

Leave A Reply

Your email address will not be published.