ரூ. 12.5 மில்லியன் சம்பளத்துடன் மின்னஞ்சலில் வந்த வேலைவாய்ப்பு; இன்பதிர்ச்சியடைந்த இளைஞன்!

0

மென்பொருள் போட்டியில் வென்ற என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியது.

மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கே இந்த உயரிய வாய்ப்பு கிடைத்துள்ளது,

இது தொடர்பில் மேலும்.,

இந்திய மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா கான்(வயது21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்.

இந்தநிலையில், அவர் கூகுள் நிறுவனம் நடத்திய மென்பொருள் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டார். அதன் மூலமாக அந்த நிறுவனம் அவரது திறமையை தெரிந்து கொண்டதையடுத்து அவருக்கு கூகுள் நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக அப்துல்கானுக்கு இ-மெயில் அனுப்பியது. அதைப்பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கூகுள் நிறுவனம் நடத்திய ஆன்-லைன் தேர்வில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவரை நேர்முகத்தேர்வுக்காக லண்டனுக்கு அழைத்து கூகுள் நிறுவனம் தேர்வு நடத்தியது. இதிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு வேலையை கூகுள் நிறுவனம் வழங்கியது.

அப்துல்கானுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்தை சம்பளமாக கொடுக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. அவர் வரும் நவம்பர் மாதம் கூகுளில் பணியில் சேர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.