லண்டனில் இலங்கைத் தமிழர் குத்திக் கொலை ! அதிர்ச்சிப் பின்னணி !

0

பிரிட்டனில் இலங்கை தமிழர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி பொலிசாரினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் நார்ஃபோக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த குமாரதாஸ் ராஜசிங்கம் (வயது 57), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர். அப்போது தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக ராஜசிங்கம் மீட்கப்பட்டார்.

மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவருடைய 57 வயதான மனைவி ஜெயமலரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பு கூறுவதாவது;

கொலை சம்பவத்தில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தம்பதியினர் மட்டுமே அந்த சமயம் ஒன்றாக இருந்துள்ளனர்.

தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 2008 ஆம் ஆண்டு குமாரதாஸ் £195,000 செலவில் வாங்கிய மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில் தான் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

தற்போது அந்த வீடு முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இலங்கையை பூர்விகமாக கொண்ட குமாரதாஸ், தன்னுடைய வீட்டிலிருந்து 100மைல்கள் தூரத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை சொந்தமாக நடாத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வியாபாரத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.